December 21, 2020
தண்டோரா குழு
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள் ள நிலையில் கோவை மாவட்டத்திற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
2021 தமிழகத்தில் நடக்கக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கான கோவை வந்த வாக்கு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடைபெறுவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 3048 வாக்கு சாவடிகள் உள்ள நிலையில்,4267 பேலட் இயந்திரங்கள்,4267 கன்ரோல் இயந்திரங்கள்,4500 வி.வி பேட் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது
கொண்டு வரப்பட்டுள்ள, இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து ஆய்வு செய்யப்பட்டு பின்னர்,23 ம் தேதி முதல் பெங்களூரில் இருந்து பெல் நிறுவன ஊழியர்கள் சோதனை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.