• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தை விரைவாக வெளியிட வேண்டும் – கொடிசியா கோரிக்கை

September 22, 2021 தண்டோரா குழு

கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோவை வந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் அளித்தார்.

அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவைக்கான மாஸ்டர் பிளான் திட்டம் கடந்த 1994-ம் ஆண்டிலிருந்து புதுப்பிக்கப்படாமல் உள்ளது. எனவே தற்கால மற்றும் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் திட்டத்தை விரைவாக வெளியிட வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கான கட்டிட அனுமதி பெறுதல், உரிமம் பெறுதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெறுவதற்கான ஒரு மென்பொருள் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் போதிய உற்பத்தி திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க தேவையான அளவில் திறன் மேம்பாட்டு மையங்களை கட்டமைக்க வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் தமிழகத்தில் உள்ள தொழிலாளர் சக்தியை மேலும் வலுப்படுத்த தேவையான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.கோவையில் எலக்ட்ரானிக் உற்பத்திக்கென சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க