August 2, 2018
தண்டோரா குழு
கோவையில் நடந்த கார் விபத்தில்உயிரிழந்தோரின்குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை சுந்தராபுரத்தில் பொள்ளாச்சியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து கார் ஓட்டுநர் கைது செய்யபட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்த முதலமைச்சர் பழனிச்சாமிஉயிரிழந்தோரின்குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காணமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் பொது நிவாரண நிதியிலிருந்த வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.