June 14, 2018
தண்டோரா குழு
கோவையில் உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு,பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கோவையில் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் அரசு இரத்த வங்கிகள் இணைந்து இதனை நடத்தினர்.
இப்பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை நடைபெற்ற பேரணியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.