• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அர்ச்சகர்களுக்கான சம்பளத்தை உயர்த்தக்கோரி சக்திசேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

June 21, 2018 தண்டோரா குழு

கோவையில் அர்ச்சகர்களுக்கான சம்பளத்தை உயர்த்தக்கோரி சக்திசேனா அமைப்பின் சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் இந்து கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சம்பளம் உயர்த்தப்படாமல் இருக்கிறது.இந்து கோவில்களில் வருகின்ற வருமானத்தை அரசே எடுத்துக்கொண்டு பள்ளி வாசலுக்கு சலுகை வழங்குவதாக குற்றம் சாட்டினர்.மேலும் இஸ்லாமிய மத குருவிற்கு வழங்கப்படும் சம்பளம் 20,000 ரூபாய் எனவும்,பல கோவில்களில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும்,இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இருக்கும் கோவில்களில் அர்ச்சகர்களுக்கு ரூபாய் 1335 முதல் 4350 வரை வழங்கப்படுவதை உயர்த்தி வழங்க வலியுறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சக்திசேனா அமைப்பின் சார்பாக தெற்கு தாசில்தார் அலுவலகம் பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க