• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

July 7, 2017 தண்டோரா குழு

தீப்பெட்டி தொழிலுக்கு மத்திய அரசு 18 சதவீத ஜீ.எஸ்.டி வரிவிதிப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகள் கடந்த 7 நாள்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு வட்டார தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பகுதி நேர தீப்பெட்டி தொழிலுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும், இந்த தீப்பெட்டி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதுகாக்க வேண்டும், பகுதி மற்றும் முழு இயந்திர தீப்பெட்டிக்கு இடையிலான வரிவித்தியாசம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க