• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவில்களை திறக்க வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்தும் பாஜகவினர் தீ சட்டிகளுடன் ஆர்ப்பாட்டம்

October 7, 2021 தண்டோரா குழு

அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்திம் திமுக அரசை கண்டித்தும் கோவையில் பாஜகவினர் தீ சட்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரொனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக வாரங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது.மேலும் விஷேச நாட்களிலும் கோவில்களில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வலியுறுத்தி கோவை தண்டு கோவில் அருகில் 200க்கும் மேற்ப்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் தீச்சட்டி ஏந்தியும் குளவை போட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் டாஸ்மாக் திறக்க அனுமதி பள்ளிகள் அனுமதி ஆனால் கோவில்களை திறக்க மட்டும் தடையா போன்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இதில் மேடை அமைத்து காளி நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க