• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவில்களில் தீபம் ஏற்ற பாதுகாப்பான இடம் அமைக்க பாஜக கோரிக்கை

July 7, 2018

கோவில்களில் தீபம் ஏற்ற பாதுகாப்பான இடம் அமைக்கவும்,நெய் தீபம் மீண்டும் விற்பனை செய்யவும் பாஜக வினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் விளக்கு ஏற்றக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.ஆனால் தவறாக புரிந்துகொண்ட அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு கோவையிலுள்ள புகழ்பெற்ற லஷ்மிநரசிம்மர்,சங்கமேஷ்வரர் மற்றும் கோனியம்மன் கோவில்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் ராகு காலம் போன்ற சமயங்களில் நெய் தீபம் ஏற்ற கூடாது என இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சங்கமேஷ்வரர் கோவிலில் அறநிலையத்துறை வைத்திருந்த விளக்கேற்றும் இடத்தில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்

“விளக்கு ஏற்றக்கூடாது என அரசு சொல்லவில்லை எனவும்,விளக்கு ஏற்றுவதற்கு ஒரு பணியாளரை நியமித்து பாதுகாப்பான இடம் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.இந்த இடத்தில் விளக்கு ஏற்ற அனுமதிக்கப்படுகிறது என விளம்பர பலகை வைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

மேலும் ஒவ்வொரு பக்தர்களும் விளக்கு ஏற்றுவதற்கு மற்ற கோவில்களிலும் அனுமதிக்க வேண்டும். கடந்த வாரம் அனுமதி மறுக்கப்பட்டதால் தான் தற்போது வந்ததாக தெரிவித்தார்.தமிழக கோவில்களில் நெய் தீபம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.அரசின் உத்தரவை அடுத்து விற்கப்படவில்லை.இனிமேல் தகுந்த பாதுகாப்பு அளித்து நெய் தீபம் விற்பனை செய்ய கோரிக்கை விடுத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் சுற்றறிக்கைக்கு எதிராக நடக்கவில்லை எனவும்,விளக்கு ஏற்றும் இடத்தில் தான் விளக்கு ஏற்றி இருக்கிறோம்.அந்த சுற்றறிக்கையை மீறியதாக கருதினால் வழக்கு போட்டுக்கொள்ளலாம் என்றார்.இனிமேல் ஒவ்வொரு கோவில்களிலும் விளக்கு ஏற்ற உரிய இடம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்”.

மேலும் படிக்க