• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவா தேர்தலில் வாக்களித்த முதல் பெண்களுக்கு “பிங்க் கரடி”

February 4, 2017 தண்டோரா குழு

கோவா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்குப் பதிவு தினமான சனிக்கிழமை வோட்டுப் போட வந்த முதல் பெண்களுக்கு இளஞ்சிவப்பு (பிங்க்) நிற கரடி பொம்மைகள் பரிசாக அளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாட்டை தேர்தல் ஆணையமே செய்திருக்கிறது.

தங்களது கட்சிக்கு வாக்களிப்பதற்காகப் பெண்களுக்கு அரசியல் கட்சியினர் பல்வேறு பொருட்களை இலவசமாக அளித்து வாக்கு கேட்பார்கள். ஆனால், பெண்களை ஜனநாயகக் கடமையில் ஈடுபடுத்துவதற்காக தேர்தல் ஆணையமே இப்படிச் செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பெண்களுக்கு இளஞ்சிவப்பு (பிங்க்) நிறம் பிடிக்கும் என்பதால், அந்த மாநிலத்தில் பெண் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் ‘பிங்க்’ நிற வாக்குச் சாவடிகளை அமைத்துள்ளது.

கோவா தேர்தல் ஆணையத்தின் அதிகாரி கூறுகையில், “மக்கள் வாக்களித்து தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது எத்தனை முக்கியம் என்பதை உணர்த்த இது போன்ற புதிய முயற்சிகள் அவசியம். வாக்களிக்கும் உரிமையின் முக்கியத்துவத்தைப் பரப்ப வேண்டும் என்பதுதான் நோக்கம்” என்றார்.

கோவாவில் உள்ள 40 சட்டமன்ற இடங்களுக்கான தேர்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் மார்ச் 11ம் தேதி வெளியிடப்படும்.

பா.ஜ.க. – மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி கூட்டணி 2௦12ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்தது. ஆனால், இம்முறை காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் பா.ஜ.க.வுக்கு முக்கிய போட்டி.

சனிக்கிழமை காலை 7 மணி முதல் கோவா மாநிலத்தில் வாக்கு பதிவு தொடங்கியது. பனாஜியின் வாக்கு சாவடியில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்ற முதல் வாக்காளர்களோடு நின்று வாக்களித்தார்.

மேலும் படிக்க