• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோலாகலமாக நடைபெற்ற கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி

December 11, 2022 தண்டோரா குழு

கோவை நகரின் உணர்வையும் தொண்டுள்ளத்தையும் கொண்டாடும் விதமாகவும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆலோசனை, பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக செயல்பட்டு வரும் சிசிஎஃப்-க்கு உதவும் வகையில் கோயம்புத்தூர் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் , கோயம்புத்தூர் ரன்னர்ஸ் மற்றும் ஷோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டி நேரு விளையாட்டு மைதானம் அருகே துவங்கியது. 2,050 பேர் பங்கேற்ற 21.1 கிமீ அரை மராத்தான் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.ஜி.பி சைலேந்திரபாபு, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்களால் கொடியசைத்து துவக்கப்பட்டது.

4,600 பங்கேற்பாளர்களைக் கொண்ட 10 கிமீ ஓட்டம் சிசிஎஃப் நிர்வாக அறங்காவலர் டாக்டர். பாலாஜி அவர்களால் கொடியசைத்து துவக்கப்பட்டது. ஏறக்குறைய 10,000 பேர் பங்கேற்ற 5 கிமீ ஓட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஐ.ஏ.எஸ், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், வி கே சி நவ்ஷத், மேலாண்மை இயக்குனர், வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பார்க் கேட் சாலையில் துவங்கிய இந்நிகழ்வின் பரிசளிப்பு விழா ஸ்டேன்ஸ் பள்ளி மைதானத்தில் நடந்தது. பங்கேற்பாளர்களுக்கு இடையூரில்லா அனுபவத்தை வழங்க மாரத்தான் பாதையெங்கும் நீர் வழங்கும் மையங்கள், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், வழித்தட குறிப்பான்கள் மற்றும் நெறிப்படுத்தும் தன்னார்வலர்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன, பங்கேற்பாளர்களைக் கண்காணிக்கவும் அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட நேரங்களை வழங்கவும் ‘டைமிங் சிப்’கள் பயன்படுத்தப்பட்டன.

ஆண்களுக்கான 21.1 கிமீ மாரத்தான் போட்டியில் ஷிஜு.சி. வெற்றி பெற்றார். பெண்கள் அரை மாரத்தான் போட்டியில் சௌமியா வெற்றி பெற்றார்.

கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் டி பாலாஜி இது பற்றி கூறுகையில்,

“கோயம்புத்தூர் மராத்தானின் 10-வது பதிப்பை புதிய டைட்டில் பார்ட்னரான வாக்கரூவுடன் இணைந்து வெற்றிகரமாக முடித்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம். மாரத்தான் இப்போது நம் நகரத்தால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு பிரபலமான நிகழ்வாக மாறியுள்ளது. மாரத்தானின் தரம் மற்றும் நோக்கம் என இரண்டும் சேர்ந்து இதனை விசேஷமான ஒன்றாக ஆக்கியுள்ளன. இன்று எங்களால் பெரிதாக கனவு கண்டு, எங்கள் சேவைகளை மேம்படுத்தி வளர்வது சாத்தியமாகியிருக்கிறது, இதற்கு கோயம்புத்தூர் மராத்தான் பெரிய அளவில் துணை புரிந்துள்ளது. அளப்பரிய ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

பந்தய இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி கூறுகையில்,

“மாரத்தானின் பத்தாவது பதிப்பு ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது, இந்த நிகழ்வை ஒன்றிணைக்க பல மாதங்களாக உழைத்த எனது குழுவிற்கு இது, மிகவும் மனதுக்கு நிறைவளிக்கும் அனுபவமாகவும் இருந்தது. ஒவ்வொரு பதிப்பிலும், சாதனைகளை உயர்த்துவதையும், எங்கள் நிகழ்வின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம், அந்த வகையில் இந்த ஆண்டும் அதிலிருந்து வேறுபட்டதல்ல. எங்கள் நிகழ்வின் 10 பதிப்புகளிலும் ஓடிய நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் உள்ளனர், இதில் பலர் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் பாராட்டுகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம், மேலும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கோயம்புத்தூர் மக்கள், காவல் துறை, கோவை மாநகராட்சி மற்றும் பல அமைப்புகளுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2023 டிசம்பரில் நடைபெறும் அடுத்த பதிப்பில் உங்கள் அனைவரையும் மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க