• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயிலுக்குள் புகுந்து நகை திருடிய 3 பேர் கைது

September 7, 2021 தண்டோரா குழு

சிங்காநல்லூர் அருகே கோயிலுக்குள் புகுந்து அம்மன் சிலையில் இருந்த தாலி செயினை திருடிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா நகரில், விளையாட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் பூசாரி பூஜை செய்துவிட்டு கதவை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் பூஜை செய்ய பூசாரி வந்தபோது, கோயிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த தங்க செயின், லட்சுமி காயின், தாலி குண்டு, பொட்டு தாலி உட்பட 2 பவுன் எடையிலான தங்க நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது.

பூசாரி கோயில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை திருடிய ஆசாமிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3பேரை பிடித்து விசாரித்ததில், தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த சந்திரசேகரன் (25), விஜி (25), ராஜா (21) என்பதும், கோயிலில் நகை திருடியது அவர்கள் தான் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க