• Download mobile app
17 Dec 2025, WednesdayEdition - 3598
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர் மாரத்தானின் 13வது பதிப்பில் 25,000 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள்

December 17, 2025 தண்டோரா முழு

தமிழ்நாடு தடகள சங்கத்தின் அங்கீகாரத்துடன் நடைபெறும் வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்-இந்த நிகழ்வில் 21.1 கி.மீ அரை மாரத்தான், 10 கி.மீ ஓட்டம், 5 கி.மீ நேர ஓட்டம்,5 கி.மீ நடைப்பயணம் மற்றும் நான்கு பேர் இணைந்து மொத்தம் 21.1 கி.மீ தூரத்தை கடக்கும் கார்ப்பரேட் ரிலே ஆகிய பிரிவுகள் இடம்பெறுகின்றன.

பங்கேற்பாளர்களுக்காக உதவி நிலையங்கள்,தண்ணீர் பந்தல்கள்,பாதை வரைபடங்கள், வழிகாட்டும் தன்னார்வலர்கள், மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.பந்தயத்தை நிறைவு செய்பவர்களுக்கு சிற்றுண்டி வசதி வழங்கப்படும்.மேலும்,பந்தய முடிவுகள் மற்றும் தனிப்பட்ட நேரங்கள் டைமிங் சிப்ஸ் மூலம் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படும்.

மொத்த பரிசுத் தொகையானரூ.3.85 லட்சமானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும். 21.1 கி.மீ. அரை மாரத்தான் போட்டியில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ. 60,000, ரூ. 35,000 மற்றும் ரூ. 25,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும். 10 கி.மீ. ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ. 35,000, ரூ. 25,000 மற்றும் ரூ. 12,500 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

வாக்கரூ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் உடைய நிர்வாக இயக்குநர் வி. நௌஷாத் கூறுகையில்

“கோயம்புத்தூர் மாரத்தானின் 13வது பதிப்பிற்காக கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையுடன் மீண்டும் ஒருமுறை கூட்டு சேருவதில் வாக்கரூ பெருமை கொள்கிறது. இந்த ஆண்டு பிரமிக்க வைக்கும் வகையில் 25,000 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளது, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் கோயம்புத்தூர் மக்களின் ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. வாக்கரூவில், செயலூக்காமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடைபயிற்சி எளிமையான மற்றும் மிகவும் திறம்பட்ட வழி என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் தொடர்ச்சியான செயல்பாடுகள், மாரத்தானுக்கும் அப்பால் சென்று, புற்றுநோய் தடுப்பு மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முயற்சிகளை ஆதரிக்கின்றன. இந்த உயரிய நோக்கத்தின் ஒரு பகுதியாக உள்ள ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சிசிஎஃப் மேனேஜிங் ட்ரஸ்டி டாக்டர் பாலாஜி,

“கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையின் 13வது மாரத்தான் போட்டி டிசம்பர் 21, 2025 அன்று தொடங்குவது, கோயம்புத்தூர் புற்றுநோய் அறக்கட்டளையில் உள்ள எங்கள் அனைவருக்கும் மிகுந்த பெருமை தரும் தருணமாகும். ஏனெனில் இந்த நிகழ்வு கோயம்புத்தூரின் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு மரபுகளில் ஒன்றாகவும், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பராமரிப்புக்கான சக்திவாய்ந்த தளமாகவும் வளர்ந்துள்ளது. ஆண்டுதோறும், மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் அசைக்க முடியாத ஆதரவு, ஒரு பாதுகாப்பான, உலகத் தரம் வாய்ந்த மாரத்தானை வழங்க எங்களுக்கு உதவியுள்ளது, இதற்காக நமது நகரம் உண்மையிலேயே பெருமை கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இதனை வெறுமானே ஒரு ஓட்டப் பந்தயமாகப் பார்க்காமல் முழு நகரத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகின்ற ஒடுபவர்கள் முதல் தன்னார்வலர்கள் மற்றும் சாலை ஓரங்களில் நின்று உற்சாகப்படுத்தும் குடும்பங்கள் வரை அவர்கள் அனைவரும் இதைத் தங்கள் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிசிஎஃப் உடைய சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் சமூக நோய்த்தடுப்பு பராமரிப்பு சேவைகளுக்கு முக்கியமான நிதியை திரட்டும் அதே வேளையில், இந்த நிகழ்வின் தரம் மற்றும் உணர்வைத் தக்கவைக்க எங்களுக்கு உதவியதற்காக, எங்கள் டைட்டில் பார்ட்னர் வாக்கரூ, எங்கள் பார்ட்னர்ஸ் மற்றும் எங்கள் அர்ப்பணிப்புள்ள ஏற்பாட்டுக் குழுவிற்கு நாங்கள் அதே அளவில் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்களில் பலர் முதல் பதிப்பிலிருந்தே எங்களுடன் இருக்கின்றனர். டிசம்பர் 21 ஆம் தேதி பந்தய தினத்தை நாங்கள் எதிர்நோக்கியுள்ள இந்த வேளையில், புற்றுநோய்க்கு எதிரான இந்த தொடர்ச்சியான போராட்டத்தில் கோவையில் உள்ள அனைத்து மக்களையும் ஓடவும், நடக்கவும், உற்சாகப்படுத்தவும், எங்களுடன் நிற்கவும் அழைக்கிறேன் – வாழ்க்கையைக் கொண்டாடவும், உண்மையிலேயே ஒரு உன்னதமான நோக்கத்தை வெல்லவும் வாருங்கள், மீண்டும் ஒன்று சேருவோம்” என்று கூறினார்.

ரமேஷ் பொன்னுசாமி, ரேஸ் டைரக்டர், கோயம்புத்தூர் மாரத்தான் பேசுகையில்,

” எங்கள் அழைப்புக்கு பெரும் அளவில் மக்கள் பதிவு செய்ததற்கு நன்றி. நாங்கள் நன்றியுணர்வுக்கு ஆட்பட்டோம்.”லெட்ஸ் கோ கோவை!” (“Let’s Ko Kovai!”)என்ற எங்கள் கருப்பொருளுக்கு இணங்க, பல்வேறு நிகழ்வுகளுக்கு 25,000+ பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளது மற்றும் 1,500+ தன்னார்வலர்கள் முன்வந்துள்ள நிலையில், சனிக்கிழமை நடைபெறும் எக்ஸ்போவிற்கும், பந்தய தினத்தன்று தொடக்க கோட்டுக்கும் அனைவரையும் வரவேற்க, நாங்கள் தயாராக உள்ளோம். அனைத்து தரப்பு மக்களையும் ஒரு விளையாட்டு தளத்தில் ஒன்றிணைத்து, ஒரு நோக்கத்திற்காக நடத்தப்படும் இதுபோன்ற வேறு எந்த நிகழ்வும் கோயம்புத்தூரில் இல்லை. ஒவ்வொரு ஆண்டும், நிகழ்வின் போது பங்கேற்பாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களின் பயணத்தில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளின் தொழில்நுட்பம் மற்றும் அனுபவத்தை எங்கள் ஏற்பாட்டுக் குழுவினர் பயன்படுத்துவதும் எங்கள் நோக்கமாகும். மற்ற ஓட்டப்பந்தய நிகழ்வுகள் ஏற்றுக்கொள்வதற்கான அல்லது பின்பற்றுவதற்கான அளவுகோல்களை அமைப்பதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். கோயம்புத்தூர் நகர காவல்துறை, கோயம்புத்தூர் மாநகராட்சி, கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் மகத்தான ஆதரவுக்கு நன்றி, எங்கள் செயல்பாட்டுக் குழு ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்க உறுதிபூண்டுள்ளது.

நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம், டிசம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை பந்தய தினத்தையும், எங்கள் மாரத்தான் நிகழ்ச்சி மூலமும் மற்றும் அதற்குப் பிறகும் அனைவரும் தங்கள் உடற்தகுதி மற்றும் நல்வாழ்வு இலக்குகளை அடைவதையும் எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார்.

மேலும் தகவலுக்கு, [email protected]

மேலும் படிக்க