• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர் புரோஜோன் மாலில் முதன் முறையாக நகரின் மிக உயரமான இன்டோர் கிறிஸ்துமஸ் ட்ரீ அறிமுகம்

December 19, 2024 தண்டோரா குழு

கோயம்புத்தூர் புரோஜோன் மா

கோயம்புத்தூர் புரோஜோன் மாலில் முதன் முறையாக நகரின் மிக உயரமான இன்டோர் கிறிஸ்துமஸ் ட்ரீ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து புரோஜேன் மால் மைய இயக்குனர் அம்ரிக் பனேசர், செயல்பாட்டுத்தலைவர் முசாமில் ஜிங்ரு, மார்க்கெட்டிங் தலைவர் பிரிங்ஸ்டன் சகாய நாதன், தொழில்நட்ப தலைவர் எஸ்வந்த் ராவ் கூறியதாவது,

ஒவ்வொரு விழாக்காலங்களிலும் கோவை மக்களுக்காக பல பிரம்மாண்டங்களை அறிமுகப்படுத்தும் சரவணம்பட்டி புரோஜோன் மால் இந்த வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்காலங்களை முன்னிட்டு புரோஜோன் எ வெரி பியரி கிறித்துமஸ் என்ற தலைப்பில் கோயம்புத்தூரில் முதல் முறையாக நகரின் மிக உயரமான கிறிஸ்துமஸ் ட்ரீ புரோஜோன் மால் மெயின் ஏட்ரியம் – யில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மால் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளாலும் மற்றும் அலங்காரத்துடன் கூடிய செல்ஃபி ஜோன் – களும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கோலங்கள் வருகிற டிசம்பர் 20 – ஆம் தேதி முதல் ஜனவரி 5 – ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. மேலும், இந்த விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கான வியப்பூட்டும் பல கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

வருகிற டிசம்பர் 20 – ஆம் தேதி கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய கிறிஸ்துமஸ் ட்ரீ அறிமுக விழாவும், 21 – ஆம் தேதி புரோஜோன் ஜங்கிள் ஜாய்ஸ், குழந்தைகளுக்கான பேஷன் ஷோ, டிராயிங் மற்றும் பெயிண்டிங் போட்டி, 22 – ஆம் தேதி புரோஜோன் சான்டா கிட்ஸ் பலூன் ரன் சீசன் – 2 – 1 கிலோ மீட்டர் ஓட்டபந்தயம், 23 – ஆம் தேதி முதல் 25 – ஆம் தேதி வரை புரோசோன் கரோல் ஃபீஸ்டா ரூ பேண்ட் செயல்திறன் நிகழ்வு மற்றும் 27 – ஆம் தேதி முதல் 29 – ஆம் தேதி வரை ஒரு பிரம்மாண்ட உணவு திருவிழா மற்றும் டிசம்பர் 31 – ஆம் தேதி இரவு அன்று 2025 புத்தாண்டை டிஜே நைட், லைவ் இன் கான்சர்ட், டிஜே பிளாக், ஷாம்விசால், மானசி பேச்சுலர் பிராண்ட் ஆகியோர் பங்குபெறும் செலிபிரட்டி நைட் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளது.

மேலும் குழந்தைகள் பங்கேற்கும் போட்டிகளுக்கு ரூ – 2 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட உள்ளது.மேலும் விழாக்கால சலுகையாக மாலில் உள்ள 100 – க்கும் மேற்ப்பட்ட பிராண்டுகளின் மீது 50 சதவீத தள்ளுபடி விற்பனையும் நடைபெறவுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விடுமுறை காலங்களில் உங்கள் குழந்தைகளுடன் கொண்டாட புரோஜோன் மாலுக்கு வாருங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க