August 10, 2021
தண்டோரா குழு
மாற்றுக்கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் கவனம் செலுத்தும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான மசாய் ஸ்கூல், கோயம்புத்தூரைச் சேர்ந்த மென்பொருள் மேம்பாட்டு ஆர்வலர்கள் புதிய பணியைத் தொடங்க உதவும் வகையில், குறுகிய காலத்தில் கற்றுத்தரப்படும் ஃபுல்-ஸ்டேக் டெவலப்பர் புரோகிராம்களை வழங்குகிறது.
மசாய் ஸ்கூலின் திட்டங்களில் தனித்துவமானதாக விளங்கும் இப்போது கற்கலாம், பின்னர் பணம் செலுத்தலாம் அம்சமானது, இந்நிறுவனம் பின்பற்றும் வருமானப் பகிர்வு ஒப்பந்தம் மூலமாகச் சாத்தியமாகிறது.ஆர்வமுள்ளவர்கள் இந்த ஐஎஸ்ஏ மூலமாக இலவசமாகப் பதிவு செய்து ஒரு தகுந்த வேலையைப் பெற்ற பின்னர், ஒரு குறிப்பிட்ட தேதியில் இப்படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கான்பூர் ஐஐடியின் முன்னாள் மாணவரான பிரதீக் சுக்லாவை இணை நிறுவனராகக் கொண்டுள்ள மசாய் ஸ்கூல், கடந்த 2019 ஜுன் முதல் செயல்பட்டு வருகிறது. ஒரு மென்பொருள் மேம்பாட்டாளர் ஆவதில் தீவிரம் காட்டும் எந்தவொரு தனிநபரும், இந்த நிறுவனம் வழங்கும் அதிநுட்பமிக்க, 7 மாத கால ஃபுல்-ஸ்டேக் வெப் மற்றும் ஆண்ட்ராய்ட் டெவலப்மெண்ட் புரோகிராம்கள் உடன் ஆளுமை மேம்பாடு மற்றும் மென் திறன்கள் பயிற்சிகளைப் பெறலாம்.
12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இப்பயிற்சி முடிவுறும் காலத்தில் மாணவரின் வயது 18-ல் இருந்து 28-க்குள் இருக்க வேண்டும் என்பன மசாய் ஸ்கூல் வழங்கும் பயிற்சியில் சேர்வதற்கான தகுதியாகக் கொள்ளப்படுகிறது இங்கு பயிலும் மாணவர்களுக்கு தகுந்த இடத்தில் வேலை வாய்ப்பு பெறவும் வகை செய்யப்படுகிறது.
இந்நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் நோக்கம் குறித்துப் பேசிய மசாய் ஸ்கூலின் தலைமை நிர்வாக அலுவலர் அண்டு இணை நிறுவனர் பிரதீக் சுக்லா,
இந்தியாவில் கல்வி அமைப்பு அனைவருக்கும் சமநிலையில் கிடைப்பதில்லை. ஒரு சாதாரண மனிதர் தரமான கல்வியைப் பெறுவதற்காகச் சந்திக்கும் சவால்கள் ஏராளம். தரமான கல்வியைப் பெறுவதில் சமூக அந்தஸ்தும் நிதித்தடைகளும் பொதுவான இடையூறுகளாகும். தரமான கல்வி பெறுவதை ஜனநாயகப்படுத்தும் நோக்கத்துடன், வருமான பகிர்வு ஒப்பந்த மாடலை ஒரு வர்த்தக நடைமுறையாக ஒருங்கிணைக்கிறது மசாய் ஸ்கூல். இந்த ஐஎஸ்ஏ மூலமாக, கோடிங் ஆர்வலர்களுக்கான நியாயமான, பயன்படுத்த எளிதான ஒரு தளத்தை உருவாக்குகிறோம்.
எங்களது அனைத்து பயிற்சித் திட்டங்களும் மாணவர்களைத் திறன்மிக்கவர்களாக, நிபுணத்துவமிக்க பணிகளுக்கு ஏற்றவர்களாகத் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. செயல்முறை சார்ந்த கல்வியை அடிப்படையாகக் கொண்ட எங்களது கல்வி, தற்போதைய தொழில் துறை தேவைகளுடன் பொருந்துவதாகவும் இருக்கும். மாணவர்கள் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும் அனுபவத்தைப் பெறுவதோடு, ஒரு நாளைக்கு 10-12 மணி நேரம் கோடிங் திறன்களில் சிறந்து விளங்குவதற்கான பயிற்சியை மசாயில் பெறுவார்கள். கோடிங்கில் மட்டுமல்லாமல், எங்களது மாணவர்களின் முழுமையான வளர்ச்சியிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்று தெரிவித்தார்.
ஒரு வருமான பகிர்வு ஒப்பந்தம் என்பது பெறுநருக்கு மதிப்பான ஒன்றை (பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பணத் தொகை) ஒரு தனிநபர் அல்லது அமைப்பு வழங்குவதற்கான ஒரு நிதி அமைப்பாகும்; பதிலாக, பெறுநர்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் குறிப்பிட்ட மாதங்களில் தங்களது வருமானத்தில் இருந்து அந்த தொகையைத் திரும்பச் செலுத்துவார்கள். அனைத்து மசாய் ஸ்கூல் கல்விப்பயிற்சிகளிலும், மாணவர்கள் இலவசமாகப் பதிவு செய்து ஆண்டுக்கு ரூ.5 லட்சம் அல்லது அதைவிட அதிகமான சம்பளம் பெறும் வேலையை அடைந்தபிறகு ஒரு குறிப்பிட்ட தேதியில் அப்படிப்புக்கான கட்டணத்தைத் திரும்பச் செலுத்த முடியும்.
தரமான கல்வியைப் பயில்வதற்கான நிதித் தடைகளை அகற்றுவதன் மூலம், தகுதியான பல மாணவர்கள் பலனடைவார்கள் என்பதை நிரூபித்துள்ளது ஐஎஸ்ஏ மாடல். மசாய் ஸ்கூலின் முதலாவது பயிற்சி மாணவர்களில் ஒருவரான, தமிழ்நாட்டைச் சேர்ந்த முகம்மது ஹாசன் இதற்கான ஒரு சான்றாக விளங்குகிறார்.
எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்ட ஹாசன் மெக்கானிகல் என்ஜினியரிங் படித்துவிட்டு ஒரு பொருத்தமான வேலை கிடைக்காமல் தவித்து வந்தார். தனது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அவர் ஒரு மெக்கானிக் பணியில் சேர வேண்டியிருந்தது; ஆனால், அது அவரது 4 ஆண்டு கால பட்டப்படிப்புக்கு நியாயம் செய்வதாக இல்லை. பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், பெரிதாகச் சாதிக்க வேண்டுமென்பதே எப்போதும் ஹாசனின் கனவாக இருந்தது; அந்த உறுதிதான், அவரை மசாய் ஸ்கூல் வளாகத்திற்கு அழைத்து வந்தது.
மசாய் ஸ்கூலில் சேரும்போது, தங்குவதற்கு இட வசதி கூட இல்லாமல் தவித்தார் ஹாசன். அதனால், மசாய் ஸ்கூல் வளாகத்திலேயே தங்கினார்.அருகிலுள்ள மசூதிக்குச் சென்று குளித்து, பிரார்த்தனைகளை மேற்கொண்டார். இன்று, ஒரு முன்னணி ஸ்டார்ட்அப்பில் வெற்றிகரமான ஃபுல்ஸ்டேக் டெவலப்பர் ஆகப் பணியாற்றும் ஹாசன், ஏற்கனவே வாங்கிய சம்பளத்தைவிட 8 மடங்கு அதிகமாகச் சம்பாதிக்கிறார். மசாய் ஸ்கூலின் வருமான பகிர்வு ஒப்பந்த மாடல் காரணமாக, உடனடியாக கல்விக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தும் சுமையில்லாமல் ஹாசன் தனது ஃபுல்-ஸ்டேக் டெவலப்பர் புரோகிராமை தொடர முடிந்தது. ஒரு டெவலப்பராகத் தன் பணி வாழ்க்கையைத் தொடங்கி ஓராண்டுக்குப் பின்னர், ஐஎஸ்ஏ விதிமுறைகளின்படி தனது கடமையை முழுமையாகப் பூர்த்தி செய்த மசாய் ஸ்கூலின் முதலாவது மாணவராகத் திகழ்கிறார் ஹாசன்.
மாணவ சமுதாயத்தை ஆதரிக்கும் தொடர் முயற்சிகளுள் ஒன்றாக, கிளைட் புரோகிராம் என்ற பெயரில் தனது மாணவர்களுக்கு தனித்துவமான உதவித் தொகையொன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது மசாய் ஸ்கூல். இங்கு முழு நேரமாக 7-மாத கால பயிற்சியில் சேர்பவர்களில் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான தகுதி கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சிக்காலம் முழுவதும் மாதாமாதம் ரூ.15,000-யை வழங்கி சிறப்பான திறன் கொண்ட மாணவர்களை இந்த முயற்சி அங்கீகரிக்கிறது. ஐஎஸ்ஏ மாடலை போலவே, ஒரு பாதுகாப்பான வேலையைப் பெற்றபின்னர் இந்த தொகையைச் சம்பந்தப்பட்ட மாணவர்கள் திரும்பச் செலுத்தலாம்.
தற்போது, தனது அனைத்து செயல்பாடுகளையும் ஆன்லைனில் மேற்கொள்ளும் மசாய் ஸ்கூல் வரும் மாதங்களில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுள்ளது. தற்போது ஃபுல் ஸ்டேக் வெப் டெவலப்மெண்ட் (முழு நேர மற்றும் பகுதி நேரப் பயிற்சிகள்), யுஐ யுஎக்ஸ் டிசைன் புரோகிராம் ஆகியவற்றை வழங்கும் இந்நிறுவனம், இன்னும் சில மாதங்களில் டேட்டா அனலிடிக்ஸ், புராடக்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் பல்வேறு பயிற்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.