• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர்த் தமிழ்ச் சங்கமம் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு

September 23, 2022 தண்டோரா குழு

கோவையில் கோயம்புத்தூர்த் தமிழ்ச் சங்கமம், தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு வரும் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சி. சுப்பிரமணியம், கோயமுத்தூர் தமிழ்ச் சங்கமம், தலைவர், செ. துரைசாமி, தமிழ்க்காப்புக் கூட்டியக்கம், தலைவர், கா. ச. அப்பாவு, அமைப்புச் செயலாளர் பூ. அ. இரவீந்திரன், மாநாட்டுப் பொருளாளர் கவிஞர் இல. மணி, மற்றும் சமூக செயற்பாட்டாளர் லி. கனகசுப்பிரமணி ஆகியோர்
செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது பேசிய அவர்கள்,

கோயம்புத்தூர்த் தமிழ்ச் சங்கமம் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் சார்பில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு வரும் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணி முதல் மாலை 5.50 மணி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் நோக்கமானது சங்ககாலம் முன்தொட்டு தமிழ்பெற்று இருந்த ஏற்றத்தை இழந்து இருக்கின்ற நிலையில் அந்த உரிமையை மீட்டு எடுப்பதற்கு உண்டான முயற்சிதான் இந்த மாநாட்டின் மைய நோக்கம்., தற்போதைய இளைய தலைமுறையினரிடம் நமது சங்ககாலத் தமிழை கொண்டு சேர்ப்பது.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ், வழிபாட்டு தலங்கள், சடங்குகள், வாழ்வில் சடங்குகளில் தமிழ், பள்ளி, கல்லூரி, நீதிமன்றங்கள் ஆகியவற்றில் தமிழையே பயன்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாடு கோவை மாவட்டத்தை சேர்ந்த அனைத்துத் தமிழ் சங்கங்கள், மாநில மற்றும் அகில இந்தியத் தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைப்போடு நடைபெறுகின்றது. இதில் ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்வானது கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் சாலையில் இலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சியில்மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் ஆகியோரின் அருளாசியோடும் விழா நடைபெறவுள்ளது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தரும், ஏவிபி பள்ளி தலைவருமான முனைவர் சி. சுப்பிரமணியம் இம்மாநாட்டின் நெறியாளாராக உள்ளார்.

துவக்க விழாவில் முன்னாள் நீதிபதி
ந. கிருபாகரன் தொடக்கவுரையாற்றுகிறார். மேலும் கோவை, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பெ. காளிராசு கருத்துரையாற்றுகிறார், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் செகநாதன் வாழ்த்துரை வழங்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் சிறப்புரையாற்றுகிறார். மேலும் விழாவில் தமிழ் மற்றும் கல்வித்துறை இயக்குனர்கள் மற்றும் அனைத்துநிலைத் தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

மேலும் படிக்க