• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயம்புத்தூரில் எஸ்பிஆர் சிட்டி – மார்கெட் ஆஃப் இந்தியா வர்த்தகர்களுடன் சந்திப்பு

December 28, 2020 தண்டோரா குழு

நகர வர்த்தகர்களின் தன்னிறைவான ஒரு சமூகத்தை கட்டமைப்பதற்கென உருவாக்கப்படும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக மையமான எஸ்பிஆர் சிட்டி-மார்கெட் ஆஃப் இந்தியா அமைவிடம் பற்றி எடுத்துரைத்து காட்சிப்படுத்த தமிழ்நாடு முழுவதும் வர்த்தகர்கள் சந்திப்புக் கூட்டத்தை சென்னையைச் சேர்ந்த எஸ்பிஆர் குழுமம் நடத்தி வருகிறது.

வேலூர் மற்றும் மதுரை நகரங்களில் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியதற்குப் பிறகு, கோயம்புத்தூரில் வர்த்தக சமூகத்தினர் பங்கேற்பு சந்திப்பு கூட்டமானது 2020 டிசம்பர் 26-ம் தேதியன்று நடைபெற்றது.இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம், கோயம்புத்தூர்-ன் தலைவர் பாலசுப்ரமணியன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தொடக்க உரையை வழங்கினார்.

கோயம்புத்தூர் மாநகரம் முழுவதிலுமிருந்து 2020க்கும் அதிகமான வர்த்தக்கர்கள் இந்நிகழ்வில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும் மற்றும் தொழில்முனைவோருமான ஏ. ஸ்ரீராம், தமிழ்நாட்டில் வர்த்தகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து நேர்த்தியான விளக்கத்தை வழங்கினார்.

எஸ்பிஆர் குழுமத்தின் மார்க்கெட்டிங் துறையின் துணைத்தலைவர் அசோக்குமார் எஸ்பிஆர் குழுமத்தைப் பற்றியும் மற்றும் அவர்களது பல்வேறு செயல்திட்டங்கள் பற்றியும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கிக்கூறினார். எஸ்பிஆர் சிட்டியின் விற்பனைத்துறை துணைத் தலைவரும் மற்றும் மார்கெட் ஆஃப் இந்தியா செயல்திட்டத்தின் தலைவருமான சிவகுமார், மார்கெட் ஆஃப் இந்தியாவின் தனித்துவமான சிறப்பம்சங்கள் பற்றி எடுத்துரைத்தார். மார்கெட் ஆஃப் இந்தியாவின் சிறப்பான வாய்ப்புகள் பற்றியும் மற்றும் அது எதிர்காலத்தில் மொத்த விற்பனையாளர்களுக்கும் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் எப்படி உதவிகரமாக இருக்கும் என்பது பற்றியும் அவர் விரிவாகப் பேசினார்.

‘உள்நாட்டளவில் தயாரிப்போம் – உலகளவில் வர்த்தகம் செய்வோம்” என்ற தலைப்பின் மீது நடைபெற்ற நிபுணர்களின் குழு கலந்துரையாடல் நிகழ்வில் P. சிவகுமார் மற்றும் பு. கார்த்திகேயன், ஆகியோர் பங்கேற்று அரிய பல கருத்துகளையும், சிந்தனைகளையும் வழங்கினர்.

மேலும் படிக்க