June 21, 2021
தண்டோரா குழு
கோயமுத்தூர் நாகசாய் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமில் விவசாயிகள், கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளாமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலையின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது.இந்நிலையில்,இந்த நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
அதன் படி தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் அரசு சார்பாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோயம்புத்தூர் நாகசாய் டிரஸ்ட் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம் சாய்பாபாகோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கான துவக்க நிகழ்வில் நாகசாய் டிரஸ்டின் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள்,கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளாமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு,பின்னர் ஆவணங்கள் சரி பார்க்கபட்டு சமூக விலகலை பின்பற்றி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.