• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயமுத்தூர் டூ ஷீரடி ஆன்மீக சுற்றுலா பயணம் போக ரெடியா!

May 2, 2022 தண்டோரா குழு

இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ள பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு ஆன்மீக சுற்றுலாப் பயண மேற்கொள்ள ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ள பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் முதன் முறையாக தனியார் பங்களிப்புடன் கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு ஆன்மீக சுற்றுலாப் பயண மேற்கொள்ள ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.இரண்டு அடுக்கு ஏசி மற்றும் உயர்தர வசதிகளைக் கொண்ட இந்த வாராந்திர ரயில் பயணம்,செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை முடிவடையும்.

கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு,சேலம், பெங்களூர்,மந்த்ராலாயம் வழியாக ஷீரடிக்கு செல்லும் இந்த பயணத்தில்,ஒரே கட்டணத்தில், 4 நாட்களுக்கான உணவு மற்றும் ரயில் பயணத்திற்கு தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை,போர்வை,கிருமி நாசினி உள்ளிட்ட தினசரி பயன்பாட்டு பொருட்கள், ஷீரடியில் போக்குவரத்து வசதி,வியாழக்கிழமை சாய் தரிசனம்,தரிசனத் திற்கான கட்டணம் என அனைத்தும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அவசர மருத்துவ தேவைகளுக்காக மருத்துவர் ரயிலில் பயணிப்பார்.பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பயணிகள் சேவை அதிகாரி மற்றும் பயணி உதவியாளர்கள், மந்த்ராலாயம் மற்றும் ஷீரடிக்கு அனுபவமிக்க வழிகாட்டிகள்,சுத்தமான,சுகாதாரமான ரயில்வே கோச்சுகள் மற்றும் கழிப்பறைகள் என பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும்,கோயம்புத்தூரை தொடர்ந்து சென்னை , மதுரை, கன்னியாகுமரி மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும் ஆன்மீக குடும்ப சுற்றுலாப் பயணங்களை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வருங்காலத்தில் காசி, ராமேஸ்வரம், திருப்பதி , கயா மற்றும் புனித மாநிலமான உத்தரகாண்ட்க்கும் இதேபோன்று சேவை துவங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்திற்கான முன்பதிவு/தகவல்களுக்கு: saisadanxpress.com /93718 66666/93719 66666.

மேலும் படிக்க