March 4, 2020
தண்டோரா குழு
கோவையின் காக்கும் தெய்வம் ஸ்ரீ கோனியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு,கோவை ஒப்பனக்கார வீதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசல், ஜமாத்தின் சார்பாக தேர்திருவிழாவை காணவரும் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கினர். இது சமூக நல்லிணக்க செயல்பாடாக உள்ளதாக பொதுமக்கள், ஜமாத்தாரை வெகுவாக பாராட்டி சென்றனர்.
இது குறித்து அத்தார் ஜமாத் நிர்வாகிகள் கூறும்போது,
கோவையின் புகழ்பெற்ற ஸ்ரீ கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை பார்த்து தரிசிக்க பல்லாயிரக்கணக்கான, எங்களின் சகோதர, சகோதரிகளும் பெரியோர்கள், முதியவர்கள் என பலரும் கூடுகிறார்கள். இந்த திருத்தேர் விழாவை கானவரும் பக்தர்களுக்கு தாகம் தீர்க்க குடிநீர் வழங்கி உதவுவதை பெருமையாக கருதுகிறோம், மேலும் கோவை எப்பொழுதும் மனிதனேயத்திற்க்கும் ஒற்றுமைக்கும் முன்னுதாரணமாக விளங்கும் மாவட்டம் என்று கூறினார்கள்.