November 28, 2025
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இயங்கி வரும் ஜுட்ஸ் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரியின் 46வது ஆண்டு விழா பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைவர் தன்ராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி கடந்த கல்வியாண்டில் எட்டிய பல்வேறு சாதனைகளை பள்ளியின் முதல்வர் சரோ தன்ராஜ் விரிவாக எடுத்துரைத்தார். UNICEF நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மேம்பாட்டு துறை நிபுணர் கோபிநாத் மேனன், சாந்தி ஆஸ்ரமத்தின் தலைவர் டாக்டர் கிஸிவினோ அரம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கோபிநாத் ,
ஜூட்ஸ் பள்ளி யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து கடந்த மூன்று மாத காலமாக பல்வேறு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது: யுனிசெப் ஜூட்ஸ் திட்டத்தின் முயற்சியை பாராட்டுகிறேன். இத்தகைய முயற்சிகளை இங்குள்ள அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் பல்வேறு காலகட்டங்களில் பலதரப்பட்ட இடர்பாடுகளால் உயிரிழக்கின்றனர்.
அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு தங்குமிடம், உணவு, சுகாதார வசதிகளை யுனிசெப் முன்னின்று ஏற்படுத்தி தருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவதில் யுனிசெப் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. குறிப்பாக காஸா, சூடான், உக்ரேன் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகள் எந்த அளவுக்கு பாதிப்பிற்குள்ளானார்கள் அவர்களுக்கு யுனிசெப் மூலம் எவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம்.
அவசர காலத்திலும் அமைதி புரட்சி ஏற்படும் அளவிற்கு யுனிசெப் நிறுவனம் பணியாற்றி வருகிறது. இந்தியாவில் தினந்தோறும் 2500 லிருந்து 3000 குழந்தைகள் இறக்கிறார்கள். இதை தடுப்பதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் இதற்கு எந்த அளவு தவிர்க்க முடியும் என்பதை நீங்கள் கொள்கை வகுப்பாளராக மாறும்போது செயல்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய கிஸிவினோ ஆரம்,
மகாத்மா காந்தியின் கோட்பாடுகள் இன்றைய காலகட்டத்தில் எந்த அளவிற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்பதை நன்கு அறிவோம்.வேகமாக மாறிவரும் கால கட்டத்திலும்,இளம் மாணவர்கள் காந்தியின் கோட்பாடுகளை பின்பற்றி முன்னேற்றப் பாதையில் செல்ல நம்மை தயார்படுத்த வேண்டும் என்றார்.
விழாவில் இந்தியா,சிரியா,சைனா பிரேசில் ஆப்கானிஸ்தான், உக்ரேன்,கேரளா நாடுகளின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. இது பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.