May 5, 2018
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் 10 வது காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா ஆரம்பமானது. மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் தோட்ட கலைத்துறை மூலம் கோடை விழா நடத்தப்படுகிறது.
இதன் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரியில் 10 வது காய்கறி கண்காட்சி தொடங்கப்பட்டது. இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக சுமார் 200 கிலோ பல்வேறு காய்கறிகள் எடை கொண்ட நுழைவு வாயில்,500 கிலோ கத்தரிக்காய்களை கொண்டு மிக பிரம்மாண்டமான நந்தி உருவம்,பார்பி கேள்,மாட்டு வண்டி,ஜான் சலிவன் நினைவக மாதிரி தோற்றம்,2 செல்பி ஸ்பார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் கோவை,திண்டுக்கல்,தேனி,விழுப்புரம்,தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களிலிருந்து பல்வேறு காய்கறி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் மலை தோட்ட காய்கறிகள் சிறப்பிடம் வகித்துள்ளது.
மேலும்,இந்நிகழ்ச்சியில் சுற்றுலா அறநிலைய முதன்மை செயலாளர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா,நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.