• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோட்சே இந்த நாட்டின் தேச பக்தர் என்று சொன்னால் காந்தி யார் ? – கே.எஸ்.அழகிரி

November 30, 2019

கோட்சே இந்த நாட்டின் தேச பக்தர் என்று சொன்னால் காந்தி யார் ? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் கடந்த 8 ஆண்டுகளை விட மிக மோசமாக நாடு உள்ளது.ஆறாண்டு காலத்தில் இந்த நாட்டை எவ்வளவு சீரளித்து உள்ளது என்பதை இந்த பொளாதார கொள்கை காட்டுகிறது.

கோட்சே இந்த நாட்டின் தேச பக்தர் என்று சொன்னால் காந்தி யார் ?

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு கேடான கட்சி பா.ஜ.க. என்பதை இளைஞர்கள் உணரவேண்டும்.

எளிய பொருளாதார வழி தெரியாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்த மோடியால் இந்த நாடு வீழ்ச்சியை கண்டு வருகிறது.இலங்கையில் அனைவருக்கும் அதிகார பகிர்வு வர வேண்டும் எனவே ராஜபக்சவேற்கிற்கு மோடி ஒரு அழுத்ததை தர வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் மறைமுகமாக தேர்தல் வந்தால் ஆள் தூக்கும் வேலையை ஆளுகின்ற அரசு செய்யும் என்பதால் நேரடி தேர்தல் தான் வேண்டும்.தி.மு.க. மட்டும் உள்ளாட்சி தேர்தலுக்கு வழக்கு போடவில்லை .அ.தி.மு.க.வின் தோழமை கட்சிகளும் வழக்கு தொடர்ந்திருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் குளருபடிகள் இருப்பதால் தான் தி.மு.க. வழக்கு தொடர்ந்திருக்கிறது.மராட்டியத்தில் பா.ஜ.க. எப்படி ஆட்சி அமைத்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

குடியரசு தலைவர்,ஆளுநர்கள் தான் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும். அவர்கள் செய்ய தவறியதை உச்சநீதிமன்ற செய்திருக்கிறது.ஒரு வயதான ஆளுநரை மூன்று மணிக்கு எழுப்பி ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் என்ன ? எப்படி மராட்டியத்தில் ஆட்சி அமைத்தார்களோ அதேபோல் கோவாவிலும் எதிர்கட்சிகள் ஒன்றினைந்து ஆட்சி அமைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க