• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோடிகளில் லொள் லொள்.

April 11, 2016 www.chaindia.com

நாய் என்பது ஒரு வளர்ப்புப் பிராணி. அது கடந்த காலங்களில் வீட்டைக் காவல் காக்கவும், கிராமப்புறங்களில் தோட்டம் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதில் பல்வேறு வகைகள் இருந்தன, நாட்டு நாய், ராஜபாளையம் நாய், கொம்பை, வேட்டை நாய் உள்ளிட்ட பல வகைகளை இந்தியாவில் வளர்த்து வந்தனர். இதில் ராஜபாளையம், கொம்பை ஆகியவை வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டன.

இதனால் இந்த வகை நாய்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. இந்நிலையில் நாளாக நாளாக நாய் வளர்ப்பு என்பது ஒரு பொழுது போக்காக மாறி அதை ஒரு தொழிலாகவே மாற்றிவிட்டனர். குறிப்பாக நகர்ப் பகுதிகளில் உள்ளவர்கள் நாய் வளர்ப்பது ஒரு கவுரவமாகவே பார்க்கத் துவங்கிவிட்டனர்.

அதிலும் தங்களது வசதிக்கேற்ப அதிக விலை உள்ள நாய் வளர்ப்பது கவுரவம் என நினைத்தனர். இதைச் சாதகமாக்கிய வர்த்தகர்கள் வெளிநாட்டு நாய் வகைகளையும், கலப்பின நாய்களையும் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் ஈடுபடுபவர்கள் நாளாக நாளாக இதற்கு அடிமையாகி எந்த அளவிற்கும் செலவு செய்யத் துணிந்து விடுகின்றனர். அதிலும் உலகளவில் உள்ள அறிய வகை நாய்களை வளர்ப்பதில் ஒரு சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த சில வருடங்களாக அதிக விலைக்கும் அரிதாகவும் விற்பனை செய்யப்பட்ட வகையில் முதன்மையானது சைபீரியன் ஹஷ்ஷி எனப்படும் பனிப் பிரதேசங்களில் பனி வாகனத்தை இழுக்கும் நாய் தான்.

இந்த நாய் இந்திய வானிலைக்கு ஒத்து வராது அதுவும் மலைப் பிரதேசங்களில் கூட இந்த வகை நாய்கள் தாங்குவது கடினம். ஆனாலும் அதற்காகத் தனி அரை ஒன்றை ஏற்பாடு செய்து அதில் அந்த வகை நாய்களைத் தங்கவைக்கின்றனர்.

இதற்காகத் தனி ஏ.சி வசதியும் செய்யப்படும். அந்த வகை நாய்கள் அதிகபட்சமாக சுமார் 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக ஒரு கண் வெள்ளையாகவும், ஒரு கண் மாநிறமாகவும் இருந்தால் அதிக விலை. இதை தான் பெரிய பணக்காரர்கள் அனைவரும் வாங்கி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் முதன் முதலில் கொண்டு வரப்பட்ட ஒரு வகை நாய் தான் கொரியன் டோச மஷ்டிப். இந்த நாய் சாதாரணமாக பார்க்கும் யாருக்கும் பிடிக்காது.

ஏனெனில் இந்த நாயின் தோல் பகுதி முழுவதும் சுருக்கம் சுருக்கமாக இருக்கும். முகம் மட்டும் இல்லாமல் கால் மற்றும் உடல் பகுதியிலும் தோல் சுருங்கி இருக்கும். முகத்தில் மட்டும் முகமே தெரியாத அளவிற்குச் சுருக்கங்கள் இருக்கும். இந்த நாய் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் திபெத்தில் இருந்த வந்த மஷ்டிப் அதிகபட்சமாக 65 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. ஆனால் அதை விட அதிக சுருக்கங்களும் மெத்தை போன்ற தன்மையும் கொண்ட சைனவைச் சேர்ந்த வகை ஒரு குட்டி ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த நாய் விற்பனையாளர் ஒருவர் ஒரு ஆண் மற்றும் பெண் குட்டியை வாங்கி வந்துள்ளார். இரண்டையும் விமான நிலையத்தில் இருந்து ரோல்ஸ் ரைஸ் மற்றும் ரேஞ் ரோவர் ஆகிய வண்டிகளில் அழைத்து வந்தார். ஆனால் அந்த கார்கள் நாய்க் குட்டிகளை விட விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை நாய்களை வளர்ப்பதற்கு தற்போது பெரும் பணக்காரர்களிடம் போட்டி நிலவி வருகிறது. ஒரு நாய்க் குட்டி வாங்கும் பணம் இருந்தால் சென்னை டி நகரில் ஒரு வீடே வாங்கி விடலாம். ஆனால் எந்த ஒரு வேலைக்கும் பயனில்லாத சாதுவான குழந்தைகள் விளையாட்டிற்கு மட்டும் பயன்படும் இந்த நாய்களைக் கோடிக்கணக்கில் போட்டு வாங்கும் மக்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மேலும் படிக்க