August 8, 2018
தண்டோரா குழு
கோடானு கோடி மக்களின் இதயத்தில் வாழ்வார் கருணாநிதி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம்
செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை ராஜாஜி அரக்கில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார்.” என பதிவிட்டுள்ளார்.