• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு- கோவையில் அதிமுகவை சேர்ந்த சஜீவனிடம் தனிப்படை போலிசார் விசாரணை

April 27, 2022 தண்டோரா குழு

கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கை விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வரும் நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விற்கு நெருக்கமானவர்களிடமும் அதிமுக வை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிமுக வை சேர்ந்த சஜீவனிடம் கோவை காவலர் பயிற்சி மையத்தில் தனிப்படை போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில், டி.ஐ.ஜி முத்துசாமி மேற்பார்வையில் தனிப்படை போலிசாரால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காலை 11 மணியளவில் துவங்கிய இந்த விசாரணையானது சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்டது.விசாரணை முடிந்து வந்த சஜீவன் விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டார். சஜீவன் அதிமுக மாநில வர்த்தக அணி பொறுப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபக நாட்களாக கோடநாடு விசாரணை சூடு பிடிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க