December 22, 2021
தண்டோரா குழு
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கோவையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
சசிகலா சிறைசென்ற பின்னர் கோடநாடு எஸ்டேட்டை விவேக் நிர்வகித்து வந்ததாக கூறப்பட்டது.முரண்பாடுகள் காரணமாக நிர்வாகப் பணிகளில் இருந்து விலகியதாகவும் சொல்லப்பட்ட நிலையில் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை முடிந்து வாடகை காரில் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறினார்.