November 25, 2021
தண்டோரா குழு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக – இரண்டாவது முறையாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தனிப்படை போலிசார் கோவையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக போலிசார் தனிப்படை அமைத்து மீண்டும் விசாரணையை துவங்கி உள்ளனர்.
இதில் இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சகோதரர் தனபால் உறவினர் ரமேஷை போலிசார் கைது செய்தனர்.
தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன் போலிஸ் காவலில் எடுத்து விசாரித்து பல்வேறு தகவல்களை திரண்டி உள்ளனர்.இந்நிலையில் இரண்டாவது முறையாக கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜிடம் தனிப்படை போலிசார் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து விசாரணையை துவங்கி உள்ளனர்.
எஸ்டேட் முழுவதும் மேற்பார்வை மற்றும் பராமரிப்பு பணிகளை நடராஜன் கவனித்து வந்ததால், சம்பவம் தொடர்பாக தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.