• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொள்ளை கும்பலிடம் இருந்து 1 கோடி மதிப்பிலான தங்கநகைகள் பறிமுதல் – கோவை போலீஸ் அதிரடி !

February 19, 2020

தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் கும்பலை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கோடி மதிப்பிலான 237 பவுன் தங்கநகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 3 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கடந்த நவம்பர் மாதம் கோவை இடையர்பாளையம் அடுத்த லூனா நகர் பகுதியைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் கனகராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 137 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், 15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் கேரளா போலீசாரால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட பட்டறை சுரேஷ் என்பவரை காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பட்டறை சுரேஷ் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் துடியலூரில் பட்டும் நான்கு வீடுகள், ஈரோடு ஓசூர் உட்பட தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பல்வேறு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து பட்டறை சுரேசை நேற்று கைது செய்த போலிசார் அவரிடமிருந்து 30 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய பட்டறை சுரேஷின் கூட்டாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று நான்கு பேரையும் கைது செய்தனர்.

இதில் ராஜசேகரன், பாண்டித்துரை, மாரியப்பன் என்கிற கருவாட்டு மாரியப்பன், சுரேஷ் என்கிற சுர்லா சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்துள்ள நிலையில் ஐவரிடமிருந்தும் 237 பவுன் நகை மற்றும் 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மூன்று கார்கள் உட்பட 7 வழக்குகளில் தொடர்புடைய ஒரு கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர். இவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஐந்து பேரும் தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதோடு, அந்தப் பணத்தைக் கொண்டு மது மாது என உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பலை பிடித்த துடியலூர் மற்றும் 4 தனிப்படை போலீசாருக்கு மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா உட்பட போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க