• Download mobile app
09 Mar 2026, MondayEdition - 3680
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொள்ளையர்களுக்கு உதவிய காவலர்

December 29, 2016 தண்டோரா குழு

புதுதில்லியில்பெண் கொள்ளையர்களுக்கு உதவியதாக தலைமைக்காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டிசம்பர் 9ம் தேதி அமெரிக்க நாட்டை சேர்ந்த பெண்மணி புதுதில்லிசவாரி பஜார் ரயில் நிலையத்தில் இருந்து குர்கோன் பயணம்செய்த போது அவரிடம் இருந்த விலையுர்ந்த பொருள்களை சில பெண் கொளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரை அடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டார். ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அந்த பெண் கொள்ளையர்களை அடையாளம் கண்டனர். அதே வேளையில் அந்த பெண் கொளையர்கள் கொள்ளையடித்த பொருட்களின் ஒரு பங்கை ஒரு காவலரிடம் ஒப்படைக்கும் காட்சியும் அதில் பதிவாகி இருந்தது. இதன் மூலம் பெண் கொள்ளையர்கள் தப்பித்துச் செல்ல அந்த காவலர் உதவியது உறுதியானது. இதனை அடுத்து அதற்கு காரணமான பெண் கொள்ளையர்களை காவல் துறையினர் கைத செய்தனர். மேலும் கொள்ளைக்கு உதவிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:

தலைமைக்காவலர் பெண் கொள்ளையர்களுடன் சில பொருள்களை வாங்கும் காட்சி அந்த காணொளியில் இடம்பெற்றதை அடுத்து அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க