December 8, 2021
தண்டோரா குழு
கோவை மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிபாளையம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ரமேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி (20) கைது செய்யப்பட்டார்.
இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வநாகரத்தினம் ஆட்சியர் சமீரனிடம் பரிந்துரைத்திருந்தார். இதன் அடிப்படையில்ரகுபதி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து போலீசார் ரகுபதியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.