சீனாவில் தனது குற்றத்தை மறைக்க, தான் ஒரு ஊமை என்று நாடமாகிய இளைஞர், உண்மையிலேயே ஊமையாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் கிழக்கு மாகணமான ஷேஜியங்கில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் செங். கடந்த 2005ம் ஆண்டு,அவர் தான் தங்கியிருந்த வீட்டிற்கு தரவேண்டிய 500 யூவான்($76) வாடகை குறித்து ஏற்பட்ட தகராறில், தனது மனைவியின் மாமாவை கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அப்போது அவருக்கு 33 வயது.வேறொரு மாகாணத்திற்கு சென்ற செங், தான் செய்த கொலையை மறைக்க, சுமார் 12 ஆண்டுகளாக ஊமை போல் நடித்துள்ளார். இந்நிலையில், ஒரு கட்டுமான தளத்தில், வேளைக்கு சேர்ந்துள்ளார். அதன்பிறகு, தனது பெயரை மாற்றிக்கொண்டு, வேறொரு திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆகியுள்ளார். ஆனால், அவரிடம் சரியான அடையாள அட்டை இல்லாத காரணத்தால், அங்கிருந்த காவல்துறையினருக்கு, அவர்மீது சந்தேகம் எழுந்துள்ளது. உடனே அவர்கள் அவருக்கு ரத்த பரிசோதனை செய்துள்ளனர். அந்த ரத்த சோதனையின் முடிவில், சுமார் 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலையாளியின் டிஎன்ஏ ஒத்துபோனது. இதையடுத்து செங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் சுமார் 12 ஆண்டுகளாக பேசாமல் இருந்ததால், தற்போது அவர் உண்மையாகவே ஊமையாகிவிட்டதாக எழுத்து மூலம் தெரிவித்தார். செங் மீது இருக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கண்டிப்பாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது