• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொலையைக் கண்டுபிடிக்க உதவிய தெரு நாய்கள்

March 17, 2017 தண்டோரா குழு

பரபரப்பான கொலையைக் கண்டுபிடிக்க போலீஸ் துறையினர் வைத்திருக்கும் துப்பறியும் நாய் பயன்படுத்தப்படுவது உண்டு. ஆனால், தெருநாய்கள் ஒரு கொலையைக் கண்டுபிடிக்க உதவியதுடன், கொலைகாரனையும் காட்டிக் கொடுத்திருக்கிறது.

இச்சம்பவம் தில்லியில் வியாழன் அதிகாலையில் நடந்திருக்கிறது. இது குறித்து தில்லி போலீஸ் கூடுதல் துணை ஆணையர் சின்மய் பிஸ்வால் கூறியதாவது:

தில்லி சங்கம் விஹார் என்ற பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் முகமது அனீஷ். அவருக்குத் தனது மனைவி நர்கீஸ் (30) வேறொருவருடன் தகாத உறவு கொண்டிருப்பாளோ என்று மீது சந்தேகம் இருந்தது.

புதன் நள்ளிரவில் மனைவியின் தலையில் மண்வெட்டியால் தாக்கியிருக்கிறார். அதில் நர்கீஸ் இறந்துவிட்டார். பின்னர், அவரது உடலை அருகில் உள்ள காட்டில் போடுவதற்காக இழுத்துச் சென்றுள்ளார்.

சிறிது தூரம் இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது, தெருநாய்கள் அனீஷைப் பார்த்து பலமாகக் குரைத்தன. கொஞ்ச தூரம் இழுத்துச் சென்ற அனீஷ் பதற்றத்தில் நர்கீஸின் உடலை அருகே ஒரு வீட்டின் மாடிப்படிக்கு அருகே போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.

நள்ளிரவு நேரத்தில் நாய்கள் எல்லாம் விடாமல் பலமாகக் குரைப்பதைக் கேட்ட அப்பகுதி மக்கள் விழித்தனர். ஏதோ திருடர்கள் வந்திருக்கலாம் என்று கருதி வெளியே பார்த்தால், நர்கீஸ் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டனர். போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அதே சமயம் அவர்களுக்கு அனீஷ் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.

போலீசார் அனீஷ் வீட்டுக்குச் சென்று அவரிடம் விசாரித்தபோது, உண்மையை ஒப்புக் கொண்டார். அனீஷைக் கைது செய்த போலீசார் இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செ்யது விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் படிக்க