• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொலையாளியை குடும்பத்துடன் பஸ் நிலையத்தில் மடக்கி பிடித்த போலீசார்

September 8, 2022 தண்டோரா குழு

தஞ்சாவூர் அருகே உள்ள ராஜா புரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் வயது 27. இவர் கணபதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் திருவையாறு சேர்ந்த கார்த்திகேயன் ( 46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர் சரவணம்பட்டி அருகே உள்ள விசுவாசபுரத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். இரண்டு பேருக்கும் ஒரே ஊர் என்பதால் ஜெகதீசன் கார்த்திகேயன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். இந்நிலையில் ஜெகதீசன் வெளிநாடு செல்வதற்காக திட்டமிட்டு இருந்தார். அதற்காக எடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை கார்த்திகேயனிடம் கொடுத்திருந்தார். ஆனால் கார்த்திகேயன் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். இதன் காரணமாக இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரண்டு பேரும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தனர்.வரும் வழியில் இரண்டு பேருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஜெகதீசன் கார்த்திகேயனை தாக்கினார். பின்னர் இரண்டு பேரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது ஜெகதீசன் அயர்ந்து தூங்கினார்.அவர் மீது ஆத்திரமடைந்த கார்த்திகேயன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ஜெகதீசனின் தலையில் தாக்கி அவரை கொடூரமாக கொலை செய்தார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் அங்கு வைத்து கோவில்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் படிக்க