• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா விழிப்புணர்வு சிற்பத்தை வடிவமைத்து அசத்திய தங்க நகை பட்டறை தொழிலாளி

June 24, 2020 தண்டோரா குழு

சுமப்பதும் ஒழிப்பதும் நம் கையில் தான் உள்ளது என்று ஒரு கிராம் வெள்ளியில் கொரோனா விழிப்புணர்வு சிற்பத்தை வடிவமைத்துள்ளார் தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம்.ஒரு கிராம் தங்கத்தில் பல்வேறு சிற்பங்களை செய்துள்ள ராஜா தற்போது கொரோனா விழிப்புணர்வு குறித்து 1 கிராம் வெள்ளியில் கொரோனா தொற்றை சுமப்பதும் ஒழிப்பதும் நம் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தி உலக உருண்டையை அட்லஸ் சுமப்பது போல் வடிவமைத்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இதில் இருந்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ள முடியும் என்பதை வலியுறுத்தி இதனை வடிவமைத்ததாக தெரிவித்தார்.என்ன தான் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் தனி மனித ஒழுக்கமே இதில் பின்பற்றப் பட வேண்டும் என்றார். மேலும், முக கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுதல் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் எனவும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இதனை வடிவமைத்ததாக தெரிவித்தார்

மேலும் படிக்க