• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா பரவுவதை தடுக்க கோவை வாளையாறு பகுதியில் 8 மருத்துவர்கள் குழு

March 17, 2020

கொரோனா பரவுவதை தடுக்க கோவை வாளையாறு பகுதியில் 8 மருத்துவர்கள் குழு தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உலகம் முழுதும் தீவிரப்படுத்தப் படுள்ள நிலையில் இந்தியாவிலும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அண்டை மாவட்டங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது. கோவையில் வாளையாறு பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் 8 மருத்துவர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு வாகனங்களில் வரும் பயணிகளையும் தெர்மல் ஸ்கிரீனிங் செய்து அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்றவை உள்ளதா என சோதனை செய்கிறார்கள். மேலும் அதுபோன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனமும் நிறுத்தி வைக்கப்படுள்ளது.

மேலும் முகாம்களில் சளி, இருமல், காய்ச்சலுக்கான மாத்திரைகள் வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் வருவபர்களிடம் மருத்துவர்கள் குழு கொரோனா தொற்றை தடுப்பதற்கான வழிமுறைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர்.

மேலும் படிக்க