December 21, 2020
தண்டோரா குழு
கொரோனா தொற்று பரவல் காலத்திலும் இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன என்று அமேசான்.இன் வெளியிட்டுள்ள எஸ்எம்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் விற்பனையாளர்கள், வினியோகிப்பாளர்கள் மற்றும் தளவாட கூட்டாளர்கள், அந்தப் பகுதிகளில் உள்ள அருகாமை கடைகள், நிறுவனங்கள், டெவலப்பர்கள், உள்ளடக்கபடைப்பாளிகள், இந்திய எழுத்தாளர்கள் என 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகின்றன.
மேலும் அமேசானுடன் இணைந்து இந்த நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டது தொடர்பாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது மற்றும் தொழில்முனைவோர் மற்றும் வணிகங்கள் மீது டிஜிட்டல் மயமாக்கலின் தாக்கத்தையும்இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இது குறித்து அமேசான் இந்தியா மூத்த துணைத் தலைவர் அமித் அகர்வால் கூறுகையில்,
10 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு வணிக நிறுவனங்கள் எங்களுடன் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டானது முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது வேலை மற்றும் வாழ்வாதாரத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது.இருப்பினும்இந்த சவால்களை சமாளித்து வளர்ச்சி பெற, தொழில் முனைவோர், படைப்பாளிகள், வணிக நிறுவனங்கள், எழுத்தாளர்கள் ஆகிய துறைகளை சேர்ந்த நாம் நம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விரிவானசெயல்பாடு மற்றும் சிறந்த வாய்ப்புகளை வழங்குவதில் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் என்பது முக்கிய பங்கு வகிக்கும்.மேலும் அவர்களுக்கான வெற்றிக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக என்று தெரிவித்தார்.
அமேசான் இந்தியா துணைத் தலைவர் மனிஷ் திவாரி கூறுகையில்,
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோர் அமேசானுடன் எவ்வாறு இணைந்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவது, பிரைம் வீடியோ மற்றும் கின்டெல் ஆகியவற்றிலிருந்து டிஜிட்டல் உள்ளடக்கத்தை படிப்பது, பதிவேற்றம் செய்வது, அலெக்சாவை அவர்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது உள்ளிட்ட பலவற்றைப் பார்க்கும்போதுமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த சவாலான ஆண்டில், எங்களின்சிறு மற்றும் நடுத்தர நிறுவனகூட்டாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய உதவிடும் வகையில் பல புதுமைகளையும் நடவடிக்கைகளையும் நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள லட்சக்கணக்கான தொழில்முனைவோர், சிறு வணிகர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளர்களின் வெற்றிக்கு வாடிக்கையாளர்கள் அமேசான் மீது வைத்துள்ள நம்பிக்கையும் ஈடுபாடும் தான் காரணம் என்று தெரிவித்தார்.
2020-ம் ஆண்டில் 4,152 இந்திய விற்பனையாளர்களின் பொருட்கள் ரூ.1 கோடியை தாண்டி விற்பனை; கோடீஸ்வர விற்பனையாளர்களின் எண்ணிக்கை 29 சதவீதமாக உயர்வு, அமேசான்.இன்-ல் இந்தியா முழுவதும் 14 ஆயிரம் பகுதிகளைச் சேர்ந்த 7 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர்நடப்பு ஆண்டில் 1.5 லட்சம் புதிய விற்பனையாளர்கள் அமேசான்.இன்-ல் இணைந்துள்ளனர்.50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தி மற்றும் தமிழில் பதிவு செய்துள்ளனர்.அமேசான் வர்த்தக சந்தை விற்பனையில் 85 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதுஒட்டுமொத்த மின்னணு வர்த்தகத்தில் அமேசான் உலகளாவிய விற்பனை மூலம் 70 ஆயிரம் இந்திய ஏற்றுமதியாளர்கள் 2 பில்லியன் டாலருக்கு பொருட்களை விற்பனைகின்டெல் டைரக்ட் பப்ளிஷிங்கில் இந்திய எழுத்தாளர்கள் ரூ.45 கோடி வருவாய் ஈட்டியுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 2 மடங்கு அதிகம்.அமேசானின் அலெக்சா சாப்ட்வேர் கட்டமைப்பில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய டெவலப்பர்கள் பங்கேற்றுள்ளனர்.