• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா நிவாரண பணி – அரிசி மூட்டையை சுமந்த கோவை வட்டாச்சியர்

April 5, 2020 தண்டோரா குழு

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், உணவின்றி தவிக்கும் வட இந்தியர்கள் மற்றும் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு சமுதாய கூடம் அமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அரசின் உணவளிக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவாக கோவை கனரக லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக 750 கிலோ அரிசியும், இதே போல ஆம்னி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா அசோசியேசன் 750 கிலோ அரிசியும், கோவை மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் 2250 கிலோ அரிசியை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணியிடம் வழங்கினர். இந்த அரிசிகள் வடக்கு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசை மூட்டைகளை இறக்கி வைக்கும் பணி நடைபெற்ற போது, வடக்கு வட்டாச்சியர் மகேஷ்குமார் அரிசி மூட்டைகளை தோளில் சுமந்து சென்றார். வட்டாச்சியரின் இந்த செயல் பாராட்டை பெற்றிருப்பதோடு, இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க