November 4, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளருக்கு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை வடக்கு மாவட்டம் மதுபானக் கடை எண். 1690. ல் கடை மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்த தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தை சேர்ந்த சி.சந்தானராமன் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் பலனின்றி மரணமடநை்தார்.
இந்நிலையில் மரணமடைந்த சந்தான ராமனுக்கு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைல செய்யப்பட்டது.இதில் பாட்டாளி தொழிற்சங்க பேரவையின் மாநில துணை செயலாளர் ராமசுந்தரம், பாட்டாளி மக்கள் கட்சி டாஸ்மாக் தொழிற்சங்கத்தின் ப மாநில துணைச் செயலாளர் வேலுமணி, மாவட்ட செயலாளர் ஜீவா, எஸ்.சி.எஸ்.டி பிரிவின் மாவட்ட தலைவர் மணிமாறன் அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் ராமானுஜம் மாநில துணைச் செயலாளர் புருஷோத்தமன் மாவட்ட பொருளாளர் முத்துசாமி மற்றும் தொ.மு.ச பேரவையின் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் மாவட்ட தலைவர் ராக்கி முத்து மாவட்ட பொருளாளர் கண்ணன் மற்றும் சிஐடியு ஜான் அந்தோணி ராஜ் செந்தில் பிரபு மூர்த்தி விற்பனையாளர் சங்க மாநில துணை செயலாளர் மதியழகன் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரங்கல் கூட்டத்தில் கொரானா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பணியாளரது குடுப்பத்தினருக்கு
உரிய நிவாரணத் தொகை இருபத்தைந்து லட்சமும் அவரது,குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசுப் பணியும்வழங்கிட வேண்டி டாஸ்மாக் நிர்வாகத்திடம் வலியுறுத்துதல் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.