April 9, 2020
தண்டோரா குழு
கொரோனா தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வர வேண்டி உள்ளது.2,500 வென்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வருகின்றன.144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல்
செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும். கொரோனா தொற்றுநோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா நோயின் தாக்கத்தை பொறுத்தே அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்
கொரோனா பரவல் 3ஆம் கட்டத்திற்கு நகர வாய்ப்பு உள்ளது.சந்தைகளில் தனி மனித இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிப்பது இல்லை. இதன் காரணமாகவே, தமிழ்நாடு முழுவதும் நடமாடும் காய்கறி கடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 9 பேர் உயிரிழப்பு; நேற்று 8ஆக இருந்த பலி எண்ணிக்கை இன்று 9 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.