June 22, 2021
தண்டோரா குழு
தளபதி விஜய்யின் பிறந்த தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க கோவை மாவட்ட மாணவரணி சார்பாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக செல்லும் பொதுமக்களுக்கு இலவச ஆட்டோ சேவை திட்டம் துவங்கப்பட்டது.
நடிகர் விஜய்யின் பிறந்த தினத்தை நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாணவரணி சார்பாக காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள அலுவலகத்தில் விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜே.ஆர்.டி குழுமங்களின் தலைவர் ஜே.ராஜேந்திரன் கலந்து கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட விழாவில் நகரில் தடுப்பூசி செலுத்துவதற்காக இலவச ஆட்டோ சேவை துவங்கப்பட்டது.
மேலும் சூலூர் ஒன்றிய மாணவரணி தலைவர் சத்ய சுந்தரம் கனேசன் சார்பில் தியேட்டர் ஊழியர்களுக்கு மற்றும் சவரத் தொழிலளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்பு வழங்கபட்டது, மேலும் கணியூர் பாலா சார்பில் தூய்மை பணியர்களுக்கு பிரியாணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி நகர மாணவரணி தலைவர் சரவணன் சார்பில் சத்தான பொருட்கள், முட்டை, பால், ரஸ்க், முக கவசம், பிஸ்கட் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், செயலாளர் தேன்குமார், பொருளாளர் ரியாஷ், துணைதலைவர் கோவை நயீம், இனைச்செயலாளர்கள் செல்வம், கிரேஷ் அரவிந்த், வீரகேரளம், ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஆசீக்முகமது, பிராசந்த், இனையதள பொருப்பாளர் சுதாமன், செய்திதொடர்பாளர் கார்த்திக், அமைப்பாளர்கள் செந்தில்,மாரிராஜ்,அலுவலக பொருப்பானர் பசீர், கெளரவ ஆலோசகர் ரத்தினபுரி ராஜா, துனை அமைப்பாளர்கள் சதிஷ், சரவணன், நிர்வாகி ராஜா, உக்கடம் பகுதி தலைவர் விஷ்னு, கைலாஷ், அருன்குமார், கோவிந்த், பத்ரி, அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்
பேனர்,பட்டாசு என, வீண் செலவு இல்லாமல்,நலத்திட்ட உதவிகள் வழங்கி, பிறந்த நாள் விழா கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க மாணவரணியினரை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.