• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா தடுப்பூசி குளிரூட்டும் வசதியை வலுப்படுத்தும் வகையில், அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர் அறிமுகம்

February 10, 2021 தண்டோரா குழு

கோத்ரேஜ் அண்டு பாய்ஸ், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வடிவமைப்பதில் மேலும் ஒரு படி முன்னேறும் வகையில், தனது வர்த்தகப் பிரிவான கோத்ரேஜ் அப்ளையன்சஸ் மூலமாக இந்தியாவில் செயல்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசி நடவடிக்கைகளில் இணைந்துள்ளது கோத்ரேஜ் அண்டு பாய்ஸ். அதிக உணர்திறன் கொண்ட தடுப்பூசி மருந்துகளைச் சரியான வெப்பநிலையில் பராமரிக்கும் மருத்துவ குளிரூட்டும் தீர்வுகளை இந்தியாவிலேயே தயாரித்துள்ளது இந்நிறுவனம். தடுப்பூசி குளிரூட்டும் வசதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

2020 அக்டோபரில் பெறப்பட்ட தேசிய டெண்டரின் அடிப்படையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் அதிக வெப்பநிலை உணர்திறன் கொண்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளைத் துல்லியமாக 2°C- 8°C வெப்பநிலையில் பராமரிக்கும் வகையிலான தடுப்பூசி ரெஃப்ரிஜிரேட்டர்களை கோத்ரேஜ் அப்ளையன்சஸ் பயன்படுத்தி வருகிறது. கோவிட் தடுப்பூசி நடவடிக்கையைக் கடைக்கோடியிலும் செயல்படுத்தும் வகையிலான நீர்த்திகள், பனி பொதிகளைப் பராமரிக்க உதவும் மருத்துவ ப்ரீசர்களையும் இது பயன்படுத்துகிறது. ஒருவேளை குறிப்பிட்ட வெப்பநிலையைத் தாண்டிய சூழலில் இத்தடுப்பூசி மருந்துகள் வைக்கப்பட்டால் அவை சிதையும் அபாயத்தை எதிர்கொள்ளும். இதனால், சுகாதார மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
கோத்ரேஜ் அப்ளையன்சஸ். அதி வெப்பநிலை உணர்திறன் கொண்ட எம்ஆர்என்ஏவை அடிப்படையாகக் கொண்ட தடுப்பூசிகள் மிகக்குளிரான வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டியவை.சுற்றுச்சூழலில் தொடர்ச்சியாக பிற மூலக்கூறுகளால் சிதைக்கப்படும் அபாயம் கொண்டவை எம்ஆர்என்ஏ. செயற்கையான எம்ஆர்என்ஏவை உற்பத்தி செய்பவர்கள், அதனை வேதி மாற்றங்களுக்கு உட்படுத்தி ஒரு பாதுகாப்பான அடுக்கினுள் வைக்கின்றனர். தடுப்பூசி வீணாதலைத் தடுக்க, இதனை -80°ஊக்கும் குறைவான வெப்பநிலையில் பராமரிப்பது அவசியம். இல்லையென்றால், இவை மனித சுகாதாரத்தில் நேரடியாகப் பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, குளிரூட்டும் வசதியிலுள்ள செயல்பாட்டுப் பிரச்சனைகள் காரணமாக ஏற்படும் வீணாகுதல் அல்லது திறன் குறைபாட்டைத் தவிர்க்க வேண்டும்.

உள்ளடுக்கு அமைப்பை செயல்பாட்டு விதியாகக் கொண்ட கோத்ரேஜ் அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசரில் வெப்பநிலையைப் பரிமாற்றம் செய்யும் தட்டு ஒன்று உள்ளது.இது முதன்மையான மற்றும் இரண்டாவது அடுக்கின் இடையே வெப்ப பரிமாற்றியாகச் செயல்படுகிறது. இது, இரண்டாவது அமைப்பிலுள்ள அழுத்தத்தைக் குறைத்து வெப்பநிலை குறைய வழிவகுக்கிறது. ஒருவேளை தேவையற்ற அழுத்தம் உருவானால் இரண்டாம் நிலை அழுத்தியைக் காக்கும் வகையில், கோத்ரேஜ் அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்களில் அலாரத்துடன் கூடிய பாதுகாப்பு அமைப்புகள் உட்கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. (a) வெப்பநிலை உட்புகுதலைத் தவிர்க்க உதவும் முத்திரை ரூ உள்பாகத்திலுள்ள தனிக்கதவு, (b) செயல்பாட்டின்போது ஒட்டுமொத்த திறனை மேம்படுத்துகிற, நீண்ட நாட்களுக்குச் செயல்படவல்ல, இரண்டாவது அடுக்கிற்கான எண்ணெய் மீட்பு ஆகியன இதில் உள்ளன. மேலும், சேமித்து வைக்கப்படுகிற மருந்துகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகிற திரவ கார்பன் டை ஆக்சைடு அல்லது திரவ நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியனவும் பேக்-அப் ஆக உள்ளன. குளிரூட்டும் அமைப்பு செயல்படாமல் போனாலோ அல்லது மின் தடை ஏற்பட்டாலோ, 48 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே சீரான வெப்பநிலையை தக்கவைக்க இவை உதவும்.

ஓராண்டுக்கு 12,000 மருந்துகளை வைத்திருக்கும் திறன்கொண்டவை அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள்.தற்போது உலகம் முழுக்க இதற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இதன் கொள்ளளவை 30,000 ஆக உயர்த்தும் முயற்சியில் கோத்ரேஜ் அப்ளையன்சஸ் ஈடுபட்டுள்ளது.

கடைக்கோடியில் தடுப்பூசி பயன்பாட்டை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவும் வகையில், இதர வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது கோத்ரேஜ் அப்ளையன்சஸ். தற்போது, மகாராஷ்டிராவின் கிராமப்புறப் பகுதிகளில் வெற்றிகரமாக மொபைல் கிளினிக் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸில், மூன்று நாட்களுக்கு மின் இணைப்பு இல்லாமல் தடுப்பூசி ரெப்ரிஜிரேட்டர் இயக்கப்பட்டது. தேவைப்படும் வெப்பநிலைக்கேற்ப,இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வெப்பநிலை கண்காணிக்கப்பட்டது. தடுப்பூசி இடுதல் நடவடிக்கையை இந்தியா துரிதப்படுத்தி வரும் நிலையில், தொலைதூரப் பகுதிகளில் மிகவிரைவான பயன்பாட்டுக்கான வெற்றிகரமான வழியாக இது அமையும்.

நோய்த்தொற்று போன்ற காலகட்டத்தில், நாட்டுக்குச் சேவையாற்றுவதில் அர்ப்பணிப்போடு செயல்படுகிறது கோத்ரேஜ் அண்டு பாய்ஸ். தற்போது மிகத்தேவையாக உள்ள, உலகம் முழுக்கப் பயன்படுத்தப்படுத்தும் நோக்குடன் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரெஃப்ரிஜிரேட்டர்கள், ப்ரீசர்கள், அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள், மருத்துவப் படுக்கை ஊக்கிகள், வெண்டிலேட்டர்களுக்கான மின் காந்த வால்வுகள், வீட்டிலேயே மக்கள் பாதுகாப்பாக இருப்பதை நோக்கமாகக் கொண்ட கிருமிநாசினி சாதனங்கள் போன்ற மருத்துவக் கூறுகள் அல்லது மக்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வகை செய்யும் சமூக இடைவெளி கொண்ட அலுவலக அமைப்புகள் மூலமாக பன்முகத் தேவைகளை நிறைவேற்றுகிறது.

சமீபத்திய மேம்பாடுகள் குறித்து கோத்ரேஜ் ரூ பாய்ஸ் மேனுபேக்சரிங் கம்பெனி லிமிடெட்டின் தலைவர் அண்டு நிர்வாக இயக்குனர் ஜம்ஷைத் கோத்ரேஜ் பேசுகையில்,

கோவிட்-19 தடுப்பூசி இடுதலின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் அத்தியாவசமான தன்மையானது, நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க வழி செய்யும். இன்று, கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை திறம்படக் கையாள்வதில் உலகம் முழுக்கவுள்ள நாடுகள் சவாலைச் சந்திக்கின்றன. போதுமான குளிரூட்டும் வசதியின்மை, இன்று மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக விளங்குகிறது. இது தடுப்பூசிகள் திறனைப் பாதித்து, அதன் மூலமாக மனித சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கிறது. பல தசாப்தங்களாக குளிரூட்டும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவத்துடன் விளங்குகிற கோத்ரேஜ், தடுப்பூசிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குளிர் சேமிப்பு தீர்வுகள் மற்றும் விநியோகம் மூலமாக, கோவிட்-19-க்கு எதிரான போரில் அரசுகளுக்கு உதவுகிறது. எதிர்காலத்தில் தடுப்பூசி குளிரூட்டி கட்டமைப்பை தயாராக வைத்திருக்க வேண்டிய தேவையை, இந்த நோய்த்தொற்று அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. ஒரு குழுமமாக, புதிய தொழில்நுட்பங்களைத் தொடர்ச்சியாக மாற்றம் செய்து வருகிறோம்; நாட்டை தற்சார்பானதாக ஆக்க கூட்டு செயல்பாட்டை மேற்கொள்கிறோம். எங்களது புதிய அறிமுகமான அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள், எதிர்காலத்தில் தடுப்பூசிகளுக்கேற்ப இந்தியா தயார்நிலையில் இருக்க உதவும். இந்த முயற்சியானது, உலகத்துக்கான இந்தியாவின் தயாரிப்பு எனும் எங்களது நெறிமுறையை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது என்று தெரிவித்தார்.

இந்த மேம்பாடுகள் பற்றி கோத்ரேஜ் அப்ளையன்சஸின் வர்த்தகத் தலைவர் மற்றும் நிர்வாக துணைத் தலைவர் கமல் நந்தி பேசுகையில்,

மிகச்சிக்கலான காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு வலுவான தடுப்பூசி குளிரூட்டும் வசதியை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் எங்களது குளிரூட்டும் நிபுணத்துவம் பயன்படுத்தப்படுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். தற்போது இந்தியாவில் தடுப்பூசிகளைப் பயன்படுத்தும் வகையில் முறையே 2°C- 8°C மற்றும் -20°ஊக்கும் கீழான வெப்பநிலையில் தடுப்பூசிகளை பராமரிக்க இவை உதவுகின்றன. எங்களது புதிய அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள் -80°ஊக்கும் கீழான வெப்பநிலையை அளிக்கின்றன. உலகம் முழுக்க இதர கோவிட்-19 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியா குளிரூட்டும் தீர்வுகளை தயாராக வைத்துள்ளது. கோவிட்-19 தடுப்பூசி செயல்பாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில், கடைக்கோடியில் போக்குவரத்து வசதியற்ற பகுதிகளுக்கு மொபைல் கிளினிக் மூலமாக தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதிலுள்ள சவால்களை எதிர்கொள்ள, அதிகத் திறன் கொண்ட தடுப்பூசி குளிரூட்டும் வசதியைப் பெற உதவியாக, பல்வேறு பங்குதாரர்களுடன் நாங்கள் கூட்டுச் செயல்பாட்டில் ஈடுபடுகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க