கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மத்திய அரசு சார்பில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மருத்துவமனைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரத்யேக மருத்துவமனையாக இஎஸ்ஐ மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு இங்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை, கவனிப்பு, உணவு முறைகளால் மத்திய, மாநில அரசுகள் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பாராட்டி விருது வழங்கின. உள்ளூர் நோயாளிகள் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர்.
இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மருத்துவமனைக்கான மத்திய அரசு விருது இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஎஸ்ஐ மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிக்குமார் கூறியதாவது:
கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தமிழகத்தில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை இரண்டும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கொரோனா நோய்த் தொற்றால் நேரில் பங்கேற்க முடியாத நிலையில் விருதுகள் மருத்துவமனைக்கு விருது அனுப்பிவைக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சையுடன் தற்போது அனைத்து வித சிகிச்சைகளும் முழுமையாக அளிக்கப்பட்டு வருகிறது.எனவே இஎஸ்ஐ அட்டைதாரர்கள் எப்போதும்போல் அனைத்து விதமான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு