May 12, 2021
தண்டோரா குழு
கொரோனா தடுப்பு பணிக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ஒரு கோடியை நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்வர் முக.ஸ்டாலினிடம் நேரடியாக வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார்,
எங்களால் முடிந்த சிறு உதவியாக ஒரு கோடி ரூபாய் அளித்திருக்கிறோம்.தமிழ்நாட்டில் திராவிட அரசியல் நீடிப்பது ரொம்ப சந்தோசம். கலைஞரை 40 – வருடங்களாக சந்தித்துயிருக்கிறேன். அவர் அரசியல் வாரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி.
உடனடியாக செய்ய வேண்டியது, தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கு வேலை கொடுத்தால் தமிழ் காப்பாற்றப்படும்.