May 17, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக அரசுக்கு உதவும் வகையில், தொழில் அதிபர்கள், நடிகர்கள், திரைப்பட இயக்குநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்துவருகின்றனர்.
அந்த வகையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கொரோனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றார்.