March 19, 2020
தண்டோரா குழு
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,148ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் கொரானா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,148-ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,23,065-ஆக உயர்ந்துள்ளது. மேலும் சீனா-3,245, இத்தாலி- 2,978, ஈரான்-1,284 ஸ்பெயினில் 640 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.