November 2, 2020
தண்டோரா குழு
கடந்த ஆறு மாதமாக தொழில்கள், கல்வி என அனைத்தும் முடங்கிய நிலையில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புவதாகவும், விரைவிலேயே கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வர கடவுள் அருள் புரிவார் என கோவையில் சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
கோவை, சிங்காநல்லூரில் துவங்கியுள்ள புதிய மகாதேவ் மையத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
கடந்த ஆறு மாதமாக கொரோனா நோய் பரவலால் தொழில்கள் அனைத்தும் முடங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புவதாகவும்,மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க சிறப்பான நிர்வாகம் செய்ததாக கூறிய அவர்,குறிப்பாக சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் தங்களது பணிகளை திறம்பட செய்த்தாக தெரிவித்தார்.
மேலும் தற்போது மாற்றத்தை தர சிங்காநல்லூரில் புதிதாக துவங்கிய மகாதேவ் டைல்ஸ் அண்ட் எலக்ட்ரிக்கல் மையம் சிறப்பாக செயல்பட தமது வாழ்த்துக்களை தெவிப்பதாக கூறினார்.