April 4, 2020
தண்டோரா குழு
கொரொனா” நிவாரண நிதிக்கு”
கோவை எஸ்.என்.ஆர். அறக்கட்டளை சார்பாக ரூ 70 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.
கொரொனா வைரஸ் தற்போது உலகெங்கிலும் பெறும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து அரசாங்கங்களும் மிகப்பெரும் அளவில் பாதுகாப்பு முயற்சிகளை எடுத்து போராடி வருகின்றன. குறிப்பாக இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட இந்திய அரசும் தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த அறப்பணிக்கான பங்களிப்பாக தமிழக முதலமைச்சரின் கொரொனா நிவாரண நிதிக்காக கோவை எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் 70 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொகையினை கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணியிடம் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மி நாராயணஸ்வாமி வழங்கினார். கோவை எஸ்.என்.ஆர்.அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் பணியாற்றிவரும் மருத்துவர்கள்,பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தங்கள் ஒருநாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.