May 18, 2021
தண்டோரா குழு
கிரெடாய் கோயம்புத்தூர் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் குகன் இளங்கோ உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.சக்ரபாணியை சந்தித்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளித்தார். அவருடன் கிரெடாய் நிர்வாகிகள் அபிஷேக்,சுரேந்தர் விட்டல், ராஜீவ் ராமசாமி,எஸ்.ஆர்.அரவிந்த் குமார் மற்றும் கல்பேஷ் பாஃப்னா ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் இதற்கு முன் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட வருவாய் அதிகாரி டி.ராமதுறை முருகனை சந்தித்து, கோவையில் புதிதாக அமைக்க உள்ள கொரானா சிகிச்சை மையங்களுக்குத் தேவைப்படும் படுக்கைகள், தலையணைகள், பி.பி.இ. கிட்கள், என் 95 மாஸ்க்குகள் போன்றவைகளை வழங்கினர்.