• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரானாவிற்க்கு எதிரான மகா சக்தியாக மாறுவோம் – மோடி

April 3, 2020 தண்டோரா குழு

கொரானாவிற்க்கு எதிரான மகா சக்தியாக மாறுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாட்டு மக்களிடம் மூன்றாவது முறையாக பிரதமர் இன்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்துவதற்கு நன்றி.130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். வீட்டில் இருந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் தான் கொரோனாவை விரட்ட முடியும்.

நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாம் அனைவரும் இணைந்து கடைபிடித்து வரும் ஊரடங்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் எனவே ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுகிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்கை அணையுங்கள் , வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு முறையாக சமூக விலகலை கடைபிடித்து டார்ச் & அகல் விளக்குகளை வீட்டின் நான்கு மூலையிலும்,பால்கனியில் காட்டுங்கள் கொரானாவிற்க்கு எதிரான மகா சக்தியாக மாறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க