• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக செயல்பட்டு வருக்கிறது – பேராயர் திமோத்தி ரவீந்தர்

March 19, 2020

தென்னிந்திய திருச்சபையில் 8 மாவட்டங்கள் அடங்கிய 200 திருச்சபைகள் மற்றும் 150 கல்வி நிறுவனங்களில் கொரனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதமாக செயல்பட்டு வருவதாக தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் தெரிவித்தார்.

சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டு உள்ளது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில். தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டலமான நீலகிரி கோவை திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் கிருஷ்ணகிரி தருமபுரி ஆகிய 8 வருவாய் மாவட்டங்கள் அடங்கிய 200 திருச்சபைகள் 150 கல்விநிறுவனங்கள் விடுதிகள் குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஒருநாள் வைரஸ் தடுப்பு முறைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்து இருப்பதாக கோவை திருமண்டல பேராயர் தீமோத்தி ரவீந்தர் அவர்கள் தெரிவித்தார் மேலும் ஆலயங்களில் தெர்மல் ஸ்கேனிங் முறையில் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆலயங்கள் மற்றும் சபா மண்டபங்களை கிருமிநாசினி கொண்டு தினந்தோறும் சுத்தம் செய்தல் வேண்டும் எனவும் சுற்றறிக்கை கொடுத்துள்ளதாகவும் ஆலயத்தில் வழிபாட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக வும் தெரிவித்தார்.

மேலும் படிக்க